ஃபார்ஸி (வெப் சீரிஸ்) தமிழ் – எப்படி இருக்கு – Online விமர்சனம்

Advertisements

ஃபார்ஸி (வெப் சீரிஸ்) தமிழ் – எப்படி இருக்கு – Online விமர்சனம்

அமேசான் பிரைமில் வெளிவந்திருக்கும் க்ரைம் திரில்லர் வெப் சீரிஸ். “தி ஃபேமிலி மேன்” வெப் சீரிஸ்ன் வெற்றியைத் தொடர்ந்து ராஜ்டிகே இயக்கிய தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது மேலும் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா கேகே மேனன், ரெஜினா அமுல் பாலகர் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

Farzi Web Series

எல்லாம் சரி ஆனால் எடுத்துக்கொண்ட கதைகளம் பல திரைப்படங்களில் காட்டி காலாவதியான கள்ளநோட்டு பற்றியது. அதையும் நம்பும்படி காட்டவே இல்லை
கதை: சன்னி சிறுவயதிலேயே சிறப்பாக ஓவியம் வரைய கூடியவன். தாய் தந்தையை இழந்ததால் அவரது தாத்தா மாதவ் அவரை வளர்க்கிறார். அவர் கிராந்தி என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். இவனுக்கு சிறு வயது முதலே பெரோஸ் என்ற நண்பன் இருக்கிறான். பத்திரிக்கையை காப்பாற்ற கள்ள நோட்டு அச்சடிக்க ஆரம்பிக்கிறான்.

ஏற்கனவே கள்ள நோட்டு கும்பலின் தாதாவான மன்சூருடன் சேருமாறு ஆகிறது. மறுபுறம் இந்த கள்ள நோட்டை ஒழிப்பதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட டாஸ்க் போர்சில் விஜய் சேதுபதி மற்றும் ராசி கண்ணா இருக்கின்றனர். ஒரு பெரிய அசைன்மெண்டாக வெளிநாட்டில் இருந்து 12 ஆயிரம் கோடி கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் கடத்த முற்படும்போது என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.

Advertisements

Farzi-ott-Review

முதல் நான்கு எபிசோடுகள் பயங்கர போர். கடைசி 4 எபிசோடுகள் நன்றாக உள்ளன. புதிய கள்ள நோட்டுகளை பற்றிய டீடைல் ஓகே ஆனால் ராஜ்டிகே அந்த விஷயத்தை சுவாரஸ்யமாக மாற்ற முழுவதுமாக தவறிவிட்டார். தொடர் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே புள்ளியில் சுழன்று சலிப்பை ஏற்படுத்துகிறது. ஷாஹித் கபூரின் நடிப்பு யதார்த்தமாக உள்ளது. நெகட்டிவ் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார் மேலும் அவரது பாடி லாங்குவேஜ்க்கு தமிழில் ஜீவாவின் குரல் மிக பொருத்தம். விஜய் சேதுபதிக்கு இதில் வேலையே இல்லை அதேபோல் அவரும் ஒன்றுமே செய்யவில்லை. அவரின் விசாரணை வேடிக்கையாக இருக்கிறது.

தாத்தா பேரன் காட்சிகள் மற்றும் விஜய் சேதுபதி ரெஜினா காட்சிகள் சீரிஸ்க்கு மிகப்பெரிய வேகத்தடைகள். சேதுபதி மற்றும் ரெஜினாவின் காட்சிகள் ஃபேமிலி மேனின் தொடர்ச்சி போல் தெரிகிறது. ராஷி கண்ணாவின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. கே.கே.மேனனின் வில்லத்தனம் பரவாயில்லை. ஆபாச காட்சிகள் இல்லை ஆனால் கெட்ட வார்த்தை ஓவர் குடும்பத்துடன் பார்க்க சற்று சிரமம் தான் விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர் போன்ற நடிகர்கள் இருந்தாலும், கதையில் பலம் இல்லாததால் முழுத் தொடரும் போரடிக்கிறது. சீசன் 2ம் இதே கதை தான் போல அதையாவது சுவாரசியமாக எடுக்கிறார்களா என்று பார்ப்போம்

Advertisements

Leave a Comment