முன்னணி நடிகர்களை கதிகலங்க வைத்த பிரதீப்.. உலகளவில் லவ் டுடே திரைப்படம் பல கோடிகள் வசூல் செய்து சாதனை ..!!

0

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தற்போது இயக்கி நடித்துள்ள லவ் டுடே படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆகிவிட்டார்.  பல இடங்களில் இன்றும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது……

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலக ரசிகர்களை மட்டுமல்லாமல், சினிமா பிரபலங்கள் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது லவ் டுடே.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் தற்போது உள்ள இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது , அந்த படத்தில் நாள்தோறும் தனது காதலியுடன் சந்திக்கும் பிரச்சனைகள், சந்தோஷகளை திரையில் பார்ப்பது தான்.

 

இவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் லவ் டுடே திரைப்படம் பெரிய வரவேற்ப்பை பெற்று வருவதால், அந்த படம் நாளுக்கு நாளுக்கு வசூல் சாதனைகளையும் படைத்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் தற்போது வரையில் லவ் டுடே திரைப்படம் ரூ. 55 கோடி-யை வசூல் செய்திருக்கிறது. மேலும் நாளை இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது லவ் டுடே திரைப்படம் உலகளவில் மொத்தமாக செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம், லவ் டுடே திரைப்படம் உலகளவில் கிட்டதட்ட ரூ. 70 கோடி அளவில் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் நாளை தெலுங்கில் வெளியாகி இப்படம் வரவேற்பை பெற்றால் ரூ. 75 கோடி-யை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அறிமுக நடிகரின் திரைப்படம் இந்தளவு வசூல் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  இவரது வெற்றியை பார்த்த பல முன்னணி நடிகர்கள் பலரும் கதி கலங்கி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *