2013 ம் ஆண்டு ‘விழா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இதையடுத்து விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி, சசிகுமாரின் பிரம்மன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
பின்னர் தமிழில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால், மலையாளம் பக்கம் ஒதுங்கினார். அங்கு அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ராசியான நடிகையாக வலம் வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா மேனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களை கவரும் விதமாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மலைபிரதேசத்தில் செம கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.