TTFவாசன் பைக்-ல சாகசம் செய்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது தனது திமிர் பேச்சால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது கடலூர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக சென்ற வாசன் காண அவரது ஆதரவாளர்கள் அப்பகுதியில் குவிந்தனர்.
இதனால் அப்பகுதியில், இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக வருவதும் போவதுமாக இருந்த இளைஞர்கள் பண்ணாத அலப்பறை இல்லை என்றே நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பல இளைஞர்கள் போக்குவரத்துக்கு இடையூராக சாலைகளில் பைக்குளை நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடியும் நடித்தினர்.
மேலும் அப்பகுதியில், பைக்கில் அதிக அளவில் ஒலி எழுப்பியவாறு அவரது ஆதரவாளர்கள் நடந்து கொண்டனர். அதனை விட, அண்ணா மேம்பாலம் அருகே வரும்பொழுது சாலையில் சென்றவர்கள் மீது இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்தனர்.
200க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்து அவற்றை வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் உடன் வந்து வாகனங்கள் அனைத்தையும் செல்போன் மூலம் படம் எடுத்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
அப்போது, முதலில், காவல்துறையினர் மீது எந்த தவறு இல்லை, இல்லை என்றும் அவர்கள் நல்ல விதத்தில் நடந்து கொண்டனர் என கூறி இருந்தார் வாசன். இந்த நிலையில், தற்போது வீடியோ லைவ்வில், காவல்துறையினர் தன்னிடம் பொய் சொல்லிவிட்டதாக தனது ரசிகர்களிடம் விளக்கம் அளித்தார்.
மேலும் போலீசார் தன்னை எதுவும் செய்து விட முடியாது என்பது போல, தெனவட்டான தோணியில், அந்த வீடியோவில் பேசி இருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் பேசிய வீடியோவில், ‘நம்மல விரட்டுன போலிஸ்காரங்களே நம்மல ராஜ மரியாதையோட ஒக்கார வைப்பாங்க. இது வாய் வார்த்தையா சொல்றது இல்ல என பேசி இருக்கிறார் வாசன் மேலும்,
‘நம்ம மேல 5 வழக்கு போட்ருகாங்க. இதுக்கு வருத்தப்படல. நம்ம தான் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி கேஸ் வாங்குறோமே. என்னை அடிச்சிருந்தா கூட மன்னிச்சிருப்பேன். ஆனா அவங்க பசங்க மேல கை வச்சுட்டாங்க. நான் போலீஸ்ட கேட்டதுக்கு அவங்க கல் எடுத்து அடிச்சாங்க தம்பினு போலீஸ் பொய் சொன்னாங்க.
இப்படி ஒருத்தனை தொடர்ந்து குத்திக்கிட்டே இருந்தா அவன் ஆலமரமா வளர்றத விட, அசுர மரமா வளர்ந்துருவான். அப்படித்தான் நான் இருக்கேன்’ என அந்த வீடியோவில் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.