அந்தாரி பந்துவையாக என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி. இந்த படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது.
தொடர்ந்து 2014-ம் ஆண்டு மகமாலா என்ற தெலுங்கு சீரியலில் அடி எடுத்து வைத்தார். தொடர்ந்து தெலுங்கில் மேலும் ஒரு சில சீரியல்களில் நடித்து அங்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்தார்.
இதனையடுத்து, சன் டி.வியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இதன் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்த சீரியல் மூலம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய பிரியங்கா, தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இவரது உண்மையான பெயர் மறந்து பலரும் இவரை ரோஜா என்றே அழைத்தனர். சமீபத்தில் தான் தான் சீரியல் முடிவுக்கு வந்தது.
இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் தற்போது கருப்பு உடையில் தேவகையாக ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.