கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பை துவங்கி தற்போது வரை ரசிகர்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்றாக இருப்பது தான் சீரியல் ரோஜா. இதில் கதாநாயகனாக சிபு சூர்யன், கதை நாயகியாக பிரியங்கா நல்காரி, நடித்திருந்தனர்.
மேலும், இதில் வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதில் அர்ஜீனாகவே வாழ்ந்த வரும் சிபு சூர்யன் மற்றும் பார்த்தவுடனே வாசனையை உணரக்கூடிய ரோஜாவாக பிரியங்கா நல்காரியாக நடித்த இவர்களுக்கு குடும்ப ரசிகர்கள் மட்டுமின்றி இளம் ரசிகர்கள் பட்டாளமும் அதிகம்.
இவர்களுடைய ஜோடி பொருத்தத்தை பார்த்து ரசித்து கொண்டாடி தீர்த்தனர் இல்லத்தரசிகள். ஆரம்ப முதல் பல வருடங்கள் டிஆர்பியில் முன்னணியில் இருந்த ரோஜா தொடர் கடந்த சில மாதங்கள் மட்டும் பின்தங்கியிருந்து என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே தான் ரோஜா சீரியலை முடிக்க திட்டமிட்ட மிட்ட படக்குழு அதற்கான அறிவிப்பையும் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் தான் இன்றுடன் முடிவுக்கு வர இருக்கிறது.
இதனிடையே இந்த சீரியல் நடித்த நடிகர், நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான வார்த்தைகளால் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் தான் ரோஜா சீரியலை தொடர்ந்து, சன்டிவியில் ஹிட் அடித்த மற்றொரு தொடர் ஒன்று தற்போது முடிவு வர காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, அன்பே வா தொடர் தான் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாகவும் இதற்கான அறிவிப்பு கூடிய சீக்கிரம் வெளியிடப்படும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த தொடர் எப்போது முடிவுக்கு வருகிறது என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.