காதலருடன் மிகவும் நெருங்கிய நடிகை பிரியா பவானி சங்கர்.. விரைவில் திருமணமா.? போட்டோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் பிரியா பவானி சங்கர். இந்த சீரியலில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் மனங்களில் இப்ப வரைக்கும் நிற்கிறார்.
ரசிகர்களால் மிகவும் செல்லமாக பிரியா என்று அழைக்கப்படும் இவர் தற்போது வெள்ளி திரையிலும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து பல நடிகர்களின் படங்களிலும் நடித்து வரும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்தும் வருகிறார்.
இவர் கடந்த பல வருடங்களாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் என்றும் அவர்கள் இருவரும் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வருவதும் பல அறிந்த செய்தி தான்.
இவர்கள் எப்போது திருமணம் செய்யவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமா பிரபலங்களுக்கு இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை தற்போது இணையத்தில் பேசும் பொருளாகி இருக்கிறது. ஆம், கடற்கரையில் இருவரும் மிகவும் நெருங்கி முத்தம் கொடுப்பது போல, அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தான்.
இந்த புகைப்படங்களுடன், மற்றோரு சந்தோச செய்தியையும் பகிர்ந்துள்ளார் பிரியா பவானி சங்கர், அதில், ’18 வயதில் ஆசைபட்டு, தற்போது நமது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம் என பதிவிட்டுள்ளார்.
இதனால், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறப்போகிறதா..? என ரசிகர்கள் குழம்பினார். அதற்கும் விளக்கம் கொடுத்த பிரியா இது புதுமனை புகுவிழா நிகழ்ச்சிதான் என தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரே நேரத்தில் இரண்டு சந்தோஷமான செய்தியை சொன்ன பிரியா பவானி சங்கருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.