எண்டு கார்டு போட்டு முடிவுக்கு வரும் ரோஜா சீரியல்.. நடிகர் நடிகைகளின் உருக்கமாக பதிவு- என்ன சொல்லியிருக்காங்கன்னு தெரியுமா..?

Advertisements

கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பை துவங்கி தற்போது வரை ரசிகர்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்றாக இருப்பது தான் சீரியல் ரோஜா. இதில் கதாநாயகனாக சிபு சூர்யன், கதை நாயகியாக பிரியங்கா நல்காரி, நடித்திருந்தனர்.

மேலும், இதில் வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் அர்ஜீனாகவே வாழ்ந்த வரும் சிபு சூர்யன் மற்றும் பார்த்தவுடனே வாசனையை உணரக்கூடிய ரோஜாவாக பிரியங்கா நல்காரியாக நடித்த இவர்களுக்கு குடும்ப ரசிகர்கள் மட்டுமின்றி இளம் ரசிகர்கள் பட்டாளமும் அதிகம்.

இவர்களுடைய ஜோடி பொருத்தத்தை பார்த்து ரசித்து கொண்டாடி தீர்த்தனர் இல்லத்தரசிகள். ஆரம்ப முதல் பல வருடங்கள் டிஆர்பியில் முன்னணியில் இருந்த ரோஜா தொடர் கடந்த சில மாதங்கள் மட்டும் பின்தங்கியிருந்து என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே தான்   ரோஜா சீரியலை முடிக்க திட்டமிட்ட மிட்ட படக்குழு அதற்கான அறிவிப்பையும் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் தான் இதில் நடித்த நடிகர், நடிகைகள் சமூகவலைத்தளங்களில் மிக உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

பிரியங்கா நல்காரி
என் லைஃப்ல இந்த 4 + ஆண்டுகள் மறக்கமுடியாத பயணம். ஒரு வார்த்தைகூட தமிழ் தெரியாம இங்க வந்த என்னை நீங்க எல்லாரும் உங்க வீட்டு பொண்ணா ஏத்துக்கிட்டீங்க!

Advertisements

இந்த 4 + ஆண்டுகள்ல நிறைய நிறைய லவ் எனக்காக நீங்க எல்லாரும் கொடுத்துருக்கீங்க.. உங்களோட அன்புக்கு நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல.. ஆனா, உங்க எல்லாருடைய அன்பும் கிடைச்சதுக்கு நான் ரொம்ப ஆசிர்வதிக்கப்பட்டவள்.

நிறைய நிறைய ஞாபகங்களோட நிறைய நல்ல உள்ளங்களோட அன்பு, ஆசிர்வாதத்தோட ரோஜா சீரியலில் இருந்து விடைபெறுகிறேன். இது முடிவல்ல! இன்னொரு தொடக்கம்! விரைவில் சந்திக்கிறேன்

என்றும் அன்புடன்
பிரியங்கா நல்காரி ரோஜா என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CleOTbiPLVZ/

சிபு சூர்யன்
4 ஆண்டுகள் மிக அற்புதமான பயணம், நூற்றுக்கணக்கான நினைவுகள், அதிகளவான அன்புகள்.

மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட அர்ஜீன் கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்த சரிகம குழுவிற்கும், சன் தொலைக்காட்சிக்கும் நன்றிகள் பல. அளவுகடந்த அன்பை கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி, இந்த அன்பு என்றென்றும் தொடர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/Cld4AikJSCO/

 

Advertisements

Leave a Comment