வாரிசு படத்தின் ட்ரைலர்.. எதிர்பார்ப்பை நிறைவேற்ற எப்போது வருகிறது தெரியுமா..? இது நம்ம லேட்டஸ்ட் அப்டேட்..!!

Advertisements

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கம் திரைப்படத்தினை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ஆக்‌ஷன். எமோஷனல் என கலவையாக உருவாகி இருக்கும் திரைப்படத்தினை திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இப்படி பட்ட சூழ்நிலையில் இந்த படத்திற்கு பல சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து வருவதால் அவரது ரசிகர்களை கவலையடைச் செய்து வருகிறது.

சமீபத்தில் தெலுங்கில் வாரிசு படத்தினை வெளியிட முடியாது என தெலுங்கு திரையுலகமே கூட்டுச் சேர்ந்து அறிவித்ததை அடுத்து, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்க, ஒரு வழியாக பிரச்சனை முடிந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, அந்த திரைப்படத்தில் இருந்து, ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய நிலையில், அந்த பாடல், வேறு பாடலின் சாயலில் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து இணையத்தில் பரப்பியது விஜய் ரசிகர்களை கவலையடைச் செய்தது.

Advertisements

ஆனால் படம் பொங்கலுக்கு வெளியாவதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

இதனால் பொங்கலுக்கு வாரிசு vs துணிவு என்பது உறுதியாகியிருக்கிறது. நீண்ட நாள்கள் கழித்து விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் காண தயாராகியிருக்கின்றன.

இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வாரிசு படத்தின் ட்ரைலர் வருகிற ஜனவரி 1 புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisements

Leave a Comment