நடக்கவே முடியாத நிலையில் நடிகை சமந்தா..? அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல். .!!

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிகர் நாகசைதன்யாவை பிரிந்ததற்கு பிறகு மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் சினிமாவில் கவனம் செலுத்திய சமந்தா பல படங்களில் நடித்து வருகிறார்……

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான யஷோதா தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய வசூல் பெற்றது. இவர் அண்மையில் மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனால், வெளியில் தலை காட்டாமல் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த அவர், சமீபத்தில் தான் நடித்து வெளிவந்த யசோதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், நடிகை சமந்தாவிற்கு தற்போது மீண்டும் திடீரென உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமந்தாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாம்.

இந்நிலையில் தற்போது சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *