விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. இப்படி ஒரு காரணமா..?

Advertisements

இளைய தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்டத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே மாஸ்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ‘தளபதி 67’ திரைப் படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்படம் வரும் பொங்கலுக்கு வெளி வர இருப்பதை அடுத்து இந்த படம் குறித்த அறிவிப்புகுள் அவரது ரசிகர்களை நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது.

Advertisements

விஜய் – லோகேஷ் கனகராஜ் இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்ததை அடுத்து நான்காவது வில்லனாக இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.

கார்த்திக் இந்நிலையில், தளபதி 67 படத்தில் நடிக்க 80-களின் பிரபலமான நடிகர் கார்த்திக்கை படக்குழு அணுகியதாகவும் ஆனால் அவர் உடல்நிலை காரணமாக படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Advertisements

Leave a Comment