மலையாள சினிமா உலகமே தனி ரகம் தான். அங்கு எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. அந்த வகையில், மக்கள் மத்தியில் பெரும் நல்ல வரவேற்பு பெற்ற காதல் படங்களில் ஒன்று தான் பிரேமம்.
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்திருந்தார். நிவின் பாலின் சினிமா கெரியரில் முக்கிய திரைப்படமாக பார்க்கப்படும் இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மேலும், இப்படத்தில் நடித்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லவிக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்ததை அடுத்து, அவர், தென்னிந்திய திரையுலகளவில் பிரபலமானார்.
மேலும், இந்த படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் போன்ற நடிகைகள் அறிமுகமாகிய இளைஞர்களை தன் பக்கம் கவனம் ஈர்த்தனர்.
இந்த படத்தில் நடித்திருந்த நடிகை அனுபமாவுக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்பு அடுத்த்தடுத்து வந்தன.
20 வயதிலேயே ரசிகர்களை ஈர்த்து வந்த அனுபமா தமிழில், கொடி, தள்ளிப்போகாதே போன்ற படங்களில் நடித்தும் சைரன் படத்தில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் டிஜே தில்லு 2 என்ற படத்தில் நடிகர் சித்து ஜோன்னலசட்டாவுடன் நடிக்க கமிட்டாகினார்.
படமும் ஹைதராபாத்தில் ஷூட்டிங் ஆர்மபித்து சென்று கொண்ட போது நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய இயக்குனர் கேட்டுள்ளார். அதிர்ச்சியான அனுபமா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இதுவே மோதலாக மாறியதால் அனுபமா ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இதனால் ஷூட்டிங் நடத்தமுடியாமல் பேக்கப் செய்துள்ளார்கள்.
அனுபமா அதன்பின் வருவார் என்று எதிர்ப்பார்த்த இயக்குனருக்கு ஷாக் கொடுக்கும் வகையில் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து படத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
வேறு வழியில்லாமல் இயக்குனரும் அனுபமாவுக்கு பதில் பிரேமம் நடிகை மடோனா செபாஸ்டியனை நடிக்க கமிட் செய்து நடிக்க வைத்து வருகிறார்.