3 படத்தில் மட்டும் நடித்துள்ளவருக்கு சம்பளம் இவ்வளவா.? முன்னணி நடிகைகளை மிஞ்சும் பிரியங்கா மோகன்..!!

Advertisements

தமிழ் சினிமாவின் தற்போது உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன். தமிழில் முதல் எண்ட்ரி படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர்.

இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். படம் எதிர்பார்த்த அளவுகக்கு வெற்றியடையவில்லை என்றாலும், பிரியங்கா மோகனின் அழகில் விழுந்தனர் ரசிகர்கள்.

இதற்கு அடுத்து மீண்டும் நடிர் சிவகார்த்திகேயனுடன் இணைந்தார். பள்ளி, கல்லூரி கதை களத்தை மையமாக கொண்டு உருவான டான் என்ற படத்தில் நடித்தார் பிரியங்கா மோகன்.

இதனிடையே இந்தமூன்று திரைப்படத்திலேயே ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் தன் மடியில் சுருட்டி வைத்துக் கொண்ட பிரியங்கா மோகனின் மார்கெட் மளமளவென உயர்ந்து, தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார்.

இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது படங்களில் இவரை நடிக்க வைக்க நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

Advertisements

இதனால், தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதே போல் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் பிரியங்கா தான் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் கோலிவுட் திரையுலகின் பிசியாக கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் பிரியங்கா மோகன் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளுக்கு இணையான சம்பளத்தை பிரியங்கா மோகன் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisements

Leave a Comment