விளம்பர படத்தில் நடிக்க நடிகர் ஜெயம் ரவி வாங்கும் சம்பளம்.. இத்தனை கோடிகளா..?

0

தமிழ் திரையலகில் முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்திருந்த ராஜா கதாபாத்திரம் இவரது சினிமா கெரியரில் முக்கிய இடத்தில் இருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் அளவில் வெற்றியடைந்ததை தொடர்ந்து அவரது சம்பள மார்க்கெட்டு உயர்ந்துள்ளது.

தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் வெளியாக உருவாகி வருகிறது. மேலும் இறைவன், சைரன் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இதனிடையயே படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜெயம் ரவி தற்போது விளம்பரங்களில் நடிக்கவும் தற்போது அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு விளம்பரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் ஜெயம் ரவி.

இந்நிலையில், இந்த விளம்பரத்தில் நடிக்க நடிகர் ஜெயம் ரவிக்கு ரூ. 5 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பபட்டு வருகிறது.

 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *