சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் அறியப்பட்டவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இருந்தாலும் தனது நடிப்பின் ஆர்வத்தாலும், திறமையினாலும் இரண்டாவது படத்திலேயே, தளபதி விஜய்க்கு கதாநாயகியாக மாறினார்.
தமிழ் திரையுலகில், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது பல நடிகைகளின் கனவாக இருந்து வந்த நிலையில், இவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பைக் பார்த்து பல நடிகைகள் பொறாமை கொண்டனர் என்ற தகவலும் அப்போது வெளிவந்தன.
இருந்தாலும் விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம், இவருக்கு மிகப்பெரிய திருப்புணையாக அமைந்தது. இருந்த போதிலும், இந்த வெற்றி அவருக்கு நிலைக்க வில்லை என்றே கூறலாம்,
அதற்கு காரணம், அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக நடித்த ‘மாறன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது தான்.
இந்நிலையில் தான் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகையின் மேக்அப் குறித்து கலாய்த்து இருப்பது பலரையும் கோபப்படுத்தி இருக்கிறது. ஆம், அவர் கலாய்த்து இருப்பது, நடிகை நயன்தாராவை.
ஒரு பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது, ஒரு திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் பெயர் கொண்ட அந்த நடிகை உயிர் போகும் நேரத்தில் கூட மருத்துவமனையில் முழு மேக்கப் போட்டு கொண்டு நடித்திருந்தார். கமெர்ஷியல் படமாகவே இருந்தாலும் அது எப்படி நடக்கும் என்று நடிகை மாளவிகா மோகனன் கூறி இருக்கிறார்.
இதை கவனித்த ரசிகர்கள், அட்லி இயக்கத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் ராஜா ராணி.
இந்த படத்தில் நயன்தாரா நடித்த காட்சியை தான் நடிகை மாளவிகா கலாய்த்துள்ளார் என்று கூறி வருகிறார்கள். இன்னும் சில நயன்தாராவின் ரசிகர்கள் கடுப்பாகி மாளவிகா மோகனனை திட்டி வருகிறார்கள்.