விக்ரமின் தங்கலான் படத்தின் New Update என்னனு தெரியுமா.?

Advertisements

தங்கலான் படத்தினை தமிழ் முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்தில் கதை நாயகனாக ‘சீயான்’ விக்ரம் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் சம்மந்தமான காட்சிகளை மட்டும் படக்குழு படமாக்கியது.

Advertisements

இந்த நிலையில் தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடாக மாநிலம் கேஜிஎப் தங்கவயல் பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதில் விக்ரம், பசுபதி தொடர்பாக காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், சில வெளிநாட்டு கலைஞர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதனையடுத்து எதிர்வரும் 21 ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும் எனவும் அதனையடுத்து சென்னையில் படப்பிடிப்பு துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Comment