சினிமாவில் எப்போதும் நடிகர்கள் இடையே போட்டி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் தற்போது ஹிந்தி சினிமா ஹீரோக்கள் ஆதிக்கம் குறைந்து தற்போது தென்னிந்திய நடிகர்கள் தான் முன்னணியில் இருந்து வருகிறார்கள்.,,,,,
தற்போது Ormax நிறுவனம் டாப் 10 நடிகராக லிஸ்ட் வெளியிட்டு இருக்கிறது. அதில் 5 தெலுங்கு நடிகர்கள், 3 தமிழ் நடிகர்கள், 1 கன்னட நடிகர்கள் இடம்பெற்று இருக்கின்றனர். அக்ஷய் குமார் என்ற ஒரே ஒரு ஹிந்தி நடிகர் பெயர் மட்டுமே டாப் 10 லிஸ்டில் இடம் பெற்று இருக்கிறது.
அதிகம் பிரபலம் யார் என காட்டும் இந்த ரேங்கிங் பட்டியலில் தளபதி விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார். நீண்டகாலமாக விஜய்யை மற்ற நடிகர்கள் முந்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இடத்தில் பிரபாஸ், மூன்றாம் இடத்தில் ஜூனியர் என்டிஆர், அதற்கடுத்த இடத்தில் அல்லு அர்ஜுன் ஆகியோர் உள்ளனர். அஜித் ஆறாம் இடத்திலும், சூர்யா ஏழாம் இடத்திலும் இருக்கின்றனர்.
டாப் 10 லிஸ்ட் இதோ..