உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நடந்தது. கத்தாரில் நடந்த இறுதி போட்டியை காண, பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட்… உள்ளிட்ட அனைத்து மொழி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கத்தார் நாட்டுக்கு பறந்தனர்.
நேரில் சென்று, போட்டியை பார்க்க முடியாத பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைத்து வேலைகளையும் புறக்கணித்துவிட்டு டிவியில் இந்த போட்டியை கண்டு ரசித்தனர்.
பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடந்த இந்த போட்டியில், பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது, இந்த வெற்றி வரலாற்று சாதனையாக பார்க்கப்பட்டது.
குறிப்பாக அர்ஜென்டினா வெற்றியை இந்தியர்கள் தங்கள் நாட்டின் வெற்றிபோல் கொண்டாடி அவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
கத்தாரில் நடந்த உலக கோப்பை போட்டியை, நடிகர் அருண் விஜய்… குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார். ஸ்டேடியம் மற்றும் வெளிப்புறத்தில் தன்னுடைய மகன், மகள், மனைவி, மற்றும் சகோதரிகள் அவரின் கணவர் ஆகியோரோடு இவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் கூட நேரில் சென்று பார்த்துள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார். மம்முட்டி சென்றதை சினிமா ரசிகர்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
மேலும் நேரில் சென்ற பார்த்தவர்களின் புகைப்படங்கள் மற்றும் டிவியில் பார்த்த பிரபலங்களின் புகைப்படங்கள் இதோ..!!