தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளனார்.
இதனிடையே, இருவரும் நிஜத்திலேயே காதலில் விழுந்து, காதல் பறவைகளாக பல்வேறு இடங்களுக்கு சுற்றி வருவதாக அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அவர்கள் ஜோடியாக வெளிநாட்டுக்கு ட்ரிப் செல்ல ஏற்போர்ட் வந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரல் ஆனது. இருப்பினும் அவர்கள் காதலில் இருப்பதை இதுவரை உறுதியாக அறிவிக்கவில்லை…..
இந்த நிலையில், தான் நடிகை ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக ஒரு போட்டோ தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது.
அந்த போட்டோவில் அவர்கள் இருவரும் திருமண கோலத்தில் மாலையுடன் இருக்கின்றனர். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அந்த போட்டோவை வேகமாக பரப்பி வருகின்றனர்.
போட்டோ வைரல் ஆனாலும் உண்மையில் அது எடிட் செய்யப்பட்ட fan made போட்டோ தான் என தற்போது தெரியவந்திருக்கிறது.