தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர் என்ற மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்றி இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் விஜய்.
இந்திய முழுவதும் இவரக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார். சமீபத்தில் கூட தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்திய அளவில் பிரபலமானாவர்கள் பட்டியலில் விஜய்க்கு தான் முதலிடம்.
இதனிடையே, நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸுக்கு தயாராகும் நிலையில், தொடர்ந்து பல வழிகளில் அந்த படத்திற்கு பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய்யும் கடும் அப்செட்டில் இருப்பதாகவே தெரிகிறது. இதனால் தான் சமீபத்தில் அவரது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களை சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து காரில் வந்து இறங்கி ரசிகர்களை சந்தித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
இந்த நிலையில் தான் தற்போது விஜய் வந்த காரில் விதிகளை மீறி கருப்பு நிற பிலிம் ஒட்டப்பட்டு இருந்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. போக்குவரத்து போலீசார் விஜய்க்கு 500 ருபாய் அபராதம் விதித்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
அது மட்டுமின்றி வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் விதிகளை மீறி யானை பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக வனத்துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.
இதனால் வாரிசு படத்திற்கு அடுத்து இன்னொரு சர்ச்சை காத்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.