நடிகை அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படம் மூலமாக இளைஞர்களை கவர்ந்தவர். அந்த படத்திற்கு பிறகு அவர் தெலுங்கி படங்களில் அதிகம் நடித்து அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
அனுபமா தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் அவர் DJ Tillu 2 என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுடன் சண்டைப்போட்டுவிட்டு படத்தில் இருந்தே வெளியேறி இருக்கிறார் என்கிற தகவல் மிகவும் பரபரப்பாக பரவி வருகிறது.
DJ Tillu படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை Siddhu Jonnalagadda இயக்கி வருகிறார். அதில் ஹீரோயினாக நடிக்க அனுபமா தேர்வானார். ஷூட்டிங்கும் சில தினங்கள் நடைபெற்றது.
அதன் பின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சித்து மற்றும் அனுபமா இருவரும் சண்டை போட்டிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து அனுபமா படத்தில் இருந்தே விலகுவதாக தெரிவித்துவிட்டாராம். அதனால் தற்போது மடோனா செபாஸ்டியன் அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.