கோமாளி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த தமிழில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது.
இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது, இந்த படத்தில் வரும் தான் கதை தான், இளம் தலைமுறையினரின் காதலை காமெடி கலந்து எதார்த்ததோடு சொல்லி இருக்கிறார் பிரதீப்.
காதலி எப்படியெல்லாம் ஏமாற்றி காதலனை இருக்கிறார். அந்த உண்மை அந்த காதலனுக்கு தெரிய வரும் போது, அவன் நடந்து கொள்ளும் விதம் , தற்போது உள்ள இளம் தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சனையை கண்முன்னே நிறுத்தி இருப்பது, இந்த படத்திற்கு கூடுதல் பலம்.
படம் வெளியான நாள் முதல் திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சிகளும் கைதட்டல்களுடன் ஹவுஸ்புல் காட்சிகளாகவே ஓடியது.
சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழில் 50 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. புதுமுக நடிகரின் திரைப்படம் , மிகப்பெரிய லாபம் என்றால் அது இந்த படம் தான் என விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த திரைப்படம் தற்போது ஓடிடியலும் வெளியான லவ் டுடே குடும்ப ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகிறது.
இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்து இருக்கும் தில் ராஜு தான் லவ் டுடே படத்தை தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்திருக்கிறார்.
அங்கும் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல வசூல் குவிந்திருந்தது. தற்போது முதல் வாரத்தில் 10.6 கோடியை விட அதிகமாக லவ் டுடே அங்கு வசூலித்து இருக்கிறதாம்.