துணிவு படத்தின் -2ஆம் பாடல் இன்று ரிலீஸ்.. நடுராத்திரியில் புதிய அப்டேட் தந்த தயாரிப்பாளர். எந்த டைம்னு தெரியுமா..?

Advertisements

ஹெச். வினோத் இயக்கத்தில்  போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. இதில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான்.

துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி துணிவு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடலாக ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisements

வைசாக் எழுதிய இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இப்பாடல் யூட்யூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு துணிவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நாளில் நடிகர் விஜய்-யின் வாரிசு படமும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் துணிவு படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என்பதை தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இரவு 11 மணிக்கு தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Comment