சமந்தாவின் மாஜி கணவர்..25வயது நடிகையுடன் டேட்டிங் செய்கிறாரா ..? வெளிவந்த உண்மை..!

0

தெலுங்குத் திரையுலகில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. படங்களில் படு பிஸியாக நடித்து வந்த நாக சைதன்யா கடந்த 2017-ஆம் ஆண்டு சமந்தாவை காதலித்து திருமணம் செய்தார்..

இந்த மண வாழ்க்கை நீண்ட நாட்களாக நிலைக்கவில்லை. திருமணம் ஆகி நான்கே ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்து கொண்டார். குறிப்பாக இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்தினைத் தொடர்ந்து இருவருமே தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதாவது சமந்தாவைப் போல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக இருக்கிறார். இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், நாக சைதன்யா பற்றிய கிசுகிசுக்களும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் தான் இருக்கிறது.

அந்தவகையில் அவர் ஏற்கனவே பொன்னியின் செல்வன் பட நடிகை சோபியாவை காதலித்து வருவதாக ஏற்கெனவே ஒரு தகவல் பரவியது. இதனை உறுதி செய்யும் விதமாக இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றிய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன.

இதனைத் தொடர்ந்து மஜிலி என்கிற படத்தில் இவருடன் இணைந்து நடித்த நடிகை திவ்யன்ஷா கவுஷிக்குடன் இணைத்து பல கிசு கிசுக்கள் வெளிவந்திருந்தன. அந்தவகையில் 25 வயது நடிகையான திவ்யன்ஷா கவுஷிக் உடன் நடிகர் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக டோலிவுட்டில் மீண்டும் ஒரு தகவல் தீ போன்று பரவி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து நடிகை திவ்யன்ஷாவே சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார்.

அதாவது நாக சைதன்யா மீது தனக்கு கிரஷ் இருப்பதாகவும், ஆனால் தாங்கள் இருவரும் டேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து தங்களைப் பற்றி வெளிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *