பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாகஇருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் விஜய்யுடன் இணைந்து ‘தமிழன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் சமீபகாலமாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே அதிகளவில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடைசியாக மேட்ரிக்ஸ் 4 என்ற திரைப்படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படி சினிமாவில் படு பிஸியாக இருந்து வந்த பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில ஆண்டுகளைக் கடந்தும் பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதால், கடைசியாக வாடகைத்தாய் மூலம் அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றுக் கொண்டார்.
இருந்தாலும் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் குழந்தை பிறந்து ஓராண்டாக அவரது முகத்தை காட்டாமல் மறைத்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக அந்தக் குழந்தையின் அழகிய முகத்தை நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக வெளிக்காட்டி இருக்கிறார்கள்..
அதாவது ஹாலிவுட் பிரபலங்களுக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் ஹால் ஆஃப் ஃபேம் என ஒரு சிறப்பு கெளரவ நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில் ஹாலிவுட் பாடகர்களான நிக் ஜோனஸ் மற்றும் அவரது ஜோனஸ் சகோதரர்களை இந்த ஆண்டு ஹால் ஆஃப் ஃபேம் நிகழ்ச்சியில் கெளரவப்படுத்தப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தனது குழந்தையுடன் சென்ற போதே பிரியங்கா சோப்ரா எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸை விட செம க்யூட்டாகவும் அழகாகவும் இருப்பதாக கூறி தங்களுடைய கமெண்டுகளைப் பதிவிட்டு மகிழ்ச்சிக்குள்ளாகினர்…