மஞ்ச காட்டு மைனா.. மஜாவான போஸில் ஜொலிக்கும் சினேகா.. Latest Photos..!!

Advertisements

புன்னகை இளவரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரது குடும்பப் பாங்கான அந்த வெட்கத்துடன் நடிக்கும் அழகினை ரசிப்பதற்கென்றே ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றன.

தமிழ் சினிமாவில், கமல், தனுஷ், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இப்படி ரசிகர்களின் ஆதரவை அதிகளவில் பெற்ற சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் உண்டானது.

Advertisements

பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்த இவர்கள், இன்றுவரை மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

இதனிடையே நடிகை சினேகா, விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனையடுத்து ,மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இளசுகளின் கூட்டத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் கவர்ச்சி உடையில் சினேகா பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மஞ்ச காட்டு மைனா என அவரது அழகினை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

Advertisements

Leave a Comment