வாரிசு படத்தை தான் முதலில் பார்க்கப்போகிறேன்.. அஜித் பட இயக்குனரின் துணிச்சலான பேச்சால் ரசிகர்கள் ஷாக்..!!

2023 ஆரம்பத்திலே அதிரடியுடனே தொடங்க போகிறது தமிழ் சினிமா. ஆரம்பக்கட்டத்தில் எம்.ஜி.ஆர்- சிவாஜி ரசிகர்களுக்கு இடையே பல கட்ட மோதல்கள் ஏற்பட்டன.
அவர்களை தொடர்ந்து, ரஜினி-கமல் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் இருவரின் ரசிகர்கள் மோதிக் கொண்ட் நிகழ்வுகளும் நடந்தேறி இருப்பதாக தெரிகிறது.

ஆரம்பத்தில் அஜித்-விஜய் படங்களில் ஒருவரை ஒருவர் திட்டி பாடல்கள் எழுதப்பட்டதாக கூட விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் பொது வெளியில் இருவரும் நல்ல நண்பர்களவே இருந்தனர்.
ஆனாலும் அவர்களது ரசிகர்கள் தற்போது உள்ள காலக் கட்டத்திற்கு ஏற்ப இணையதளங்களில் சண்டை போட்டுக் கொள்ளும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

இந்த நிலையில் வரும் பொங்கல் தினத்தில், அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு வெளியாக இருக்கிறது. இதனால் முதலில் எந்த படத்தை பார்ப்பது என்பது நடுநிலை ரசிகர்களின் குழப்பமாக உள்ளது.
அதேபோல் பல திரையுலக பிரபலங்களும் முதலில் எந்த படத்தை பார்ப்பீர்கள் என்று பல கேள்விகள் எழுப்பப்ட்டு வந்தாலும், அதற்கு பதில் சொல்ல மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதே கேள்விளை துணிவு படத்தை இயக்கிய எச் வினோத் அவர்களிடம் செய்தியாளர்கள் இந்த கேள்விய கேட்ட போது வாரிசு படத்தை தான் முதலில் பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.
துணிவு படத்தின் இயக்குநராக நான் அந்த படத்தை பல முறை பார்த்துவிட்டேன் என்றும் எனவே வாரிசு படத்தை தான் நான் பார்ப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது