மனவருத்தத்தை கொட்டிய வாரிசு பட நடிகை !! சினிமாவை விட்டு வெளியேறிவிடவா என கேள்வி !!!

மனவருத்தத்தை கொட்டிய வாரிசு பட நடிகை !! சினிமாவை விட்டு வெளியேறிவிடவா என கேள்வி !!!
இப்பொது சினிமாவில் மிகவும் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரஷ்மிக – இவர் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின்மூலம் அறிமுகமானார் – புஷ்பா படத்தில் சாமீ சாமீ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகவே இவரது நடிப்பை அனைவரும் ரசிக்க தொடங்கினர்
இப்பொது தளபதி விஜயுடன் சேர்ந்து இவர் நடித்து வெளிவந்துள்ள படம் வாரிசு வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. ராஷ்மிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனமுடைந்து பேசியதும் சினிமாவை விட்டு வெளியேறிவிடவா என்று கேள்வி எழுப்பியதும் இப்பொது அவரது ரசிகர்களை வருத்தமாக்கியுள்ளது.
அவர் அளித்த பேட்டியில் கூறியது: சில நேரங்களில் என உடலால் மக்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளாகிறேன். ர்கவுட் செய்யாமல் குண்டாக இருந்தாலும் தவறு, ஒர்கவுட் செய்து ஒல்லியாக ஆனாலும் தவறு. நான் ஓவராக பேசினாலும் கிரிஞ் என்று கூறுகிறார்கள்.
பேசவில்லை என்றால் இந்த பொண்ணுக்கு அதிக திமிரு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.நான் என்னதான் செய்வது, சினிமாவை விட்டு வெளியேறிவிடவா? இல்லை வேண்டாமா? என்னிடம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், என்னிடம் அதை தெளிவாக கூறிவிடுங்கள்.
உங்களுடைய வார்த்தைகள் மனரீதியாக துன்புறுத்துகிறது ‘ என்று கூறியுள்ளார்