உலகளவில் 2022-ல் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10-ல் நீங்கள் விரும்பிய திரைப்படமும் இருக்கா என பாருங்க..!!

Advertisements

வேகமாக வளர்ந்து வரும் சினிமாத்துறையின் வளர்ச்சி பல நாடுகளையும் மிரளவைக்கிறது. ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் தங்களது திரைபடப்படங்கள் அமைய வேண்டும் என்பதில் திரைகலைஞர்கள் உறுதியோடு இருக்கின்றனர்.

அந்த வகையில் தமிழ் திரையுலகமும், தமிழ் ரசிகர்களின் ஹாலிவுட் தரத்திற்கான ஏகத்தை தீர்க்க பல வித முயற்சிகளை செய்து வருகிறது.

அந்த முயற்சிகள் பல வகையில் வெற்றியையும் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழில் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த 10 படங்களைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

10. விருமன் – நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் சங்கர் மகள் இருவரது நடிப்பில் உருவான திரைப்படம் விருமன். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.60 கோடிகள் வரை வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம், தோழி மீது ஏற்பட்ட காதலை சொல்லமுடியாமல் தயங்கும் கதாநாயகன். இந்த படம் பலரது மனங்களையும் வருடி சென்ற சிறந்த திரைப்படமாக அமைந்தது. ரூ.110 கோடிகள் வசூலித்து இருக்கிறது.

9.காத்துவாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய முன்னிய நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல், ஒரு இளைஞன் மீது இரண்டு பெண்கள் காதலிப்பது ஏன்? காமெடி கலந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.70 கோடிகள் வசூல் செய்திருக்கிறது.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு சிறந்த கம் பேக்காக அமைந்தது குறிப்பிடத்தகது.

8. லவ் டுடே

தற்போது உள்ள தலைமுறையினரின் போன் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் லவ்டுடே. காதலன், காதலியை எப்படி ஏமாற்றி இருக்கிறான், காதலி காதலனை எப்படி ஏமாற்றுகிறாள் என்பதை சுவாரசித்தோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர். வெறும் 5 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிகள் வரை வசூலித்துள்ளது.

7.டான்

நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கமான தனது காமெடிகளை கட்டவிழ்த்து விட்ட திரைப்படம் தான் டான். இந்தப்படம் உலகம் முழுவதும் 100 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாக தெரிகிறது.

6.சர்தார்

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்தப்படம் உலகம்முழுவதும் ரூ104 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாக தெரிகிறது.

Advertisements

5. திருச்சிற்றம்பலம்

தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம், தோழி மீது ஏற்பட்ட காதலை சொல்லமுடியாமல் தயங்கும் கதாநாயகன். இந்த படம் பலரது மனங்களையும் வருடி சென்ற சிறந்த திரைப்படமாக அமைந்தது. ரூ.110 கோடிகள் வசூலித்து இருக்கிறது.

4.வலிமை

நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2 வருடங்களுக்கு பிறகு வெளியான வலிமை திரைப்படம் உலகளவில் ரூ234 கோடிகள் வரை வசூலித்துள்ளது.

3.பீஸ்ட்

விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் தான் பீஸ்ட் இந்த படம் புரேமோஷனுக்காக நடிகர் விஜய் கார் ஓட்டிய நிகழ்வுகளும் நடந்தேறிய. இருந்தாலும் படம் வெளியான போது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை வந்தன. இருந்தாலும் படம் வெளியான உலகம் முழுவதும் ரூ.250 கோடிகள் வரை வசூலித்தது.

2.விக்ரம்

கமலஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம். இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடிகள் வரை வசூலித்தது.

1.பொன்னியின் செல்வன்.

இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட திரைப்படம். பொன்னியின் நாவலை எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான நாளிலிருந்து பாசிட்டிவ் ஆன விமர்சனங்கள் வந்ததால் வசூலிலும் சக்கைப் போடு போட்டது. உலகம் முழுவதும் 500 கோடிகள் வரை வசூல் செய்தது.

தகவல்கள் அனைத்து விக்கிப்பீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது.

Advertisements

Leave a Comment